குவஹாத்தி: கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய வீராங்கனை என்ற புதிய பெருமையும் பி.வி.சிந்துவுக்குக் கிடைத்துள்ளது.
இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் பேட்மிண்டனில் முதல் முறையாக வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்து புதிய வரலாறு படைத்து விட்டார் சிந்து. தங்கம் கிடைக்காதது ஏமாற்றமாக இருந்தாலும் கூட சிந்துவின் வெள்ளியும் தங்கத்தை விட நமக்கு உசத்தியானது. காரணம், இந்தியா ஒலிம்பிக் பேட்மிண்டனில் முதல் முறையாக வெள்ளியை வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.

இந்த நிலையில் ஒலிம்பிக் சமயத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய வீராங்கனைகளில் சிந்துவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அவர் அரை இறுதியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அதிரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதுமே சிந்துவை அதிகம் பேர் கூகுகளில் தேட ஆரம்பித்து விட்டனர். அவருக்கு அடுத்த இடம்தான் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக்குக்குக் கிடைத்தது.
(ஒலிம்பிக் பதக்க வேட்டையில் அசத்திய பிவி சிந்து- படங்கள்)
இவர்களுக்கு அடுத்த இடங்களில் ஸ்ரீகாந்த் கிடாம்பி, தீபா கர்மகர், சானியா மிர்ஸா, சாய்னா நேஹ்வால், வினேஷ் போகத், லலிதா பாபர், விகாஸ் கிருஷ்ணன், நரசிங் யாதவ் ஆகியோர் தேடப்பட்டுள்ளனர்.
கூகுளில் அதிகம் கேடப்பட்ட சிந்து, இந்தியாவுக்கு மிக அற்புதமான வெள்ளியை இன்று கொண்டு வந்து சேர்த்து விட்டார்.
0 comments Blogger 0 Facebook
Post a Comment