சென்ற இடமெல்லாம் வெற்றிக்கொடி நாட்டியமாவீரன் அலெக்சாண்டர்தனது 33 ஆம் வயதில் மரண தறுவாயில் படை தளபதியை அழைத்து தனது மரணத்திற்கு பிறகு செய்யப்பட வேண்டிய 3 காரியங்களை கூறினான்...
1.தனது சவப்பெட்டியை தனக்கு மருத்துவம் பார்த்த நாட்டின் மிகச்சிறந்த அந்த மருத்துவர்களே சுமந்து செல்ல வேண்டும்..
2.தனது சவ ஊர்வலம் செல்லும் போது, பாதையில் பொன்னையும் பொருளையும் வாரி இறைக்க வேண்டும்...
3.சவப்பெட்டியில் மேல்புறம் துளையிட்டுதனது 2 கைகளையும் விண்ணை நோக்கி உயர்ந்திருக்க செய்து, அதை மக்கள் காண செய்ய வேண்டும்....
இப்படி 3 வேண்டுகோள்களையும் விடுத்துவிட்டு அதற்கான காரணங்களையும் கூறினான் ..
1.எவ்வளவுதான் சிறந்த மருத்துவம் பார்த்தாலும் உயிர் போவதை எப்போதும் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது..
2.இம்மண்ணுலகில் வாழும் போது எவ்வளவு சம்பாதித்தாலும்அது இம்மண்ணுலகில் தான் இருக்கும் ...கூட வராது..
3.மாவீரன் அலெக்சாண்டர் எவ்வளவுதான் நாடுகளையும்,பொருளையும் சம்பாதித்தாலும்செத்தபின்பு வெறும் கையுடன்தான் போகின்றான் என மக்கள் அறியவேண்டும் ....
0 comments Blogger 0 Facebook
Post a Comment