நீரிழிவு நோய்யை கட்டுபடுத்தும் காய்கறிகள் :-

தற்போது நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையில் இந்தியா முதலில் உள்ளது. ஏனெனில் இந்தியர்கள் எந்த ஒரு உணவிலும் சரியான கட்டுப்பாட்டுடன் இல்லாததால், பாரபட்சமின்றி நோய்கள் உடலைத் தாக்குகின்றன. அவ்வாறு தாக்கும் நோயில் ஒன்று தான் நீரிழிவு. அதிலும் அந்த நோய் வந்தால், அதற்கான டயட சார்ட்டை தயார் செய்வது என்பது மிகவும் கடினம். பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தந்தாலும், நீரிழிவு நோயளிகளுக்கு சில நேரங்களில் அவை கெடுதலை விளைவிக்கும். ஏனெனில் நிறைய காய்கறிகளில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பொருள் உள்ளது.

உதாரணமாக, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் போன்ற காய்கள் அனைத்தும் உடலுக்கு மிகவும் சிறந்தவை. ஆனால், அது நீரிழிவு உள்ளவர்களுக்கு சிறந்தது அல்ல.

ஆகவே இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எந்த ஒரு உணவை உண்ண வேண்டுமென்றாலும், மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. அதிலும் உண்ணும் காய்கறிகள் மற்றும் பழங்களில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நிச்சயம் இனிப்பு உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காய்கறிகள் தான் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம், அவற்றிலும் இனிப்புகள் அதிகம் இருக்கும் காய்கறிகளும் உள்ளன.

எனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், எந்த காய்கறிகளை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதைப் பார்ப்போமா!!!

பாகற்காய்

நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த பாகற்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

வெந்தயக் கீரை

கீரை வகைகளில் வெந்தயக் கீரையை சாப்பிட்டு வந்தால், நீரிழிவைத் தடுக்கலாம். இந்த கீரையில் உள்ள லேசான கசப்பு சுவையானது, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை குறைக்கிறது.

வெண்டைக்காய்

வெண்டைக்காயை நறுக்கும் போது வரும் ஒருவித பசை போன்ற நீர்மம், நீரிழிவைக் கட்டுப்படுத்தும். அதற்கு இரவில் தூங்கும் போது வெண்டைக்காயை இரண்டாக கீறி, ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, அதிகாலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

சுரைக்காய்

இன்சுலின் குறைபாட்டினால் வரும் நீரிழிவை, சுரைக்காயின் சாற்றை எடுத்து, காலையில் குடித்து வர சரியாகும்.

லெட்யூஸ் (Lettuce)

இந்த பச்சை இலைக் காய்கறியில் நார்ச்சத்து அதிகமாகவும், சர்க்கரையின் அளவு குறைவாகவும் உள்ளது. ஆகவே இதனை சாப்பிடுவது நல்லது.

காலிஃப்ளவர்

மற்ற காய்கறிகளைப் போன்று, காலிஃப்ளவர் இனிப்பு சுவையற்றது. ஆகவே இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால், உடலானது நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இனிப்பு சுவை இல்லாத காய் என்பதால, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.

பூசணிக்காய்

அனைவருக்குமே பூசணிக்காய் இனிப்பு சுவையுடையது என்பது தெரியும். ஆனால் அவற்றில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக இருக்கும். எனவே தான் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு காய்கறி.

பிரெஞ்சு பீன்ஸ்

பிரெஞ்சு பீன்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. எனவே இதனை நீரிழிவு உள்ளவர்கள் உண்டால், நீரிழிவைத் தடுக்கலாம்

0 comments Blogger 0 Facebook

Post a Comment

g http://go.ad2up.com/afu.php?id=822188
 
Tamil lol © 2016-17. All Rights Reserved. Share on Albert Company. Powered by Albert
Top