Samsung தொலைபேசிகள் விற்பனைக்கு தடை
அண்மையில் புதிதாக வெளியிடப்பட்ட Samsung Galaxy Note7 தொலைபேசிகள் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக விற்பனையாகி வருகின்றன.
இந்த நிலையில் தொலைபேசி அதிகமாக வெப்பமாகி வெடிப்பதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து Samsung நிறுவனம் தொலைபேசிகளை திரும்ப பெற முடிவு செய்துள்ளது.
தொலைபேசி வெடித்தமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கிடைத்த எதிர்க் கருத்துக்களை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 17ஆம் திகதி உலகம் முழுவதிலும் அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy Note7 தொலைபேசிகள் இதுவரை 10 லட்சம் விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட Samsung நிறுவனத்தின் Dongjin Koh எந்த திகதியில் குறித்த தொலைபேசியை வாங்கி இருந்தாலும் அதனை கொடுத்து பதிலாக புதியதொரு Smart phone பெற்றுக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.
0 comments Blogger 0 Facebook
Post a Comment