முதுகுவலி நீங்க 6 வழிகள்!

நவீன வாழ்வால் நமக்கு ஏற்பட்ட பாதிப்பு முதுகுவலி. ஆனால், இதை நம்மால் தவிர்க்க முடியும் என்பதுதான் நல்ல விஷயம். சில முக்கியமான விஷயங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் முதுகுவலியை முறியடிக்கலாம்.

1. ஆரோக்கியமான எடை

பெரும்பாலானவர்களுக்கு முதுகுவலி ஏற்பட, உடல் பருமன் ஒரு காரணம். உயரத்துக்கு ஏற்ற சரியான எடையைப் பராமரிப்பது முதுகுவலியை அண்ட விடாமல் செய்யும்.

2. முதுகுத் தசையை வலுவாக்குங்கள்

முதுகுத் தண்டுவடம்தான் மேல் உடலின் ஆதாரம். இது வலுவாக இருக்க, முதுகுத் தசைகள் வலுவாக இருக்க வேண்டியது அவசியம். எனவே, அதற்கான ஸ்ட்ரெச்சிங் மற்றும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

3. நல்ல உடல் அமைப்பு (Posture) பராமரிப்பு

தவறான பொசிஷனில் அமர்வது, படுப்பது, எழுந்திருப்பது,  நடப்பது போன்றவை முதுகுவலியை ஏற்படுத்தும். தோள்பட்டை வளையாமல், கூன் விழாமல் அமர்வது, முதுகை வளைக்காமல் எழுவது போன்றவை முதுகுவலியில் இருந்து காக்கும்.

4. கனமானவற்றைத் தூக்கும்போது கவனம்

கனமான பொருட்களைத் தூக்கும்போது முதுகெலும்பு பாதிக்கபடும். கனமான பொருட்களைத் தூக்கும் முன்னர், முதுகை வளைக்காமல் அமர்ந்து, அந்தப் பொருளைப் பற்றி, தூக்கிய பின்னர் நிதானமாக உயர்த்த வேண்டும்.

5. கனமான பர்ஸைப் பின்புற பாக்கெட்டில் வைக்காதீர்கள்

சிலர், பர்ஸில் தேவையற்ற பில்கள், விசிட்டிங் கார்டுகள் என நிரப்பிக்கொண்டு, அதைப் பின்புற பாக்கெட்டில் வைத்து அமர்ந்திருப்பார்கள். இதனால் அமரும் கோணம் மாறுபட்டு முதுகுவலி ஏற்படும். எனவே, இதைத் தவிர்க்க வேண்டும்.

6. படுக்கையைக் கவனியுங்கள்

ஆழ்ந்த உறக்கம் கிடைப்பதற்கு ஏற்ற செளகர்யமான படுக்கை, தலையணைகளைப் பயன்படுத்த வேண்டும். முதுகெலும்பை வளைக்காமல் உறங்குவது நல்லது. தூங்கும்போது முதுகெலும்பு வளைவதும் முதுகுவலிக்கு முக்கியமான காரணம்.

0 comments Blogger 0 Facebook

Post a Comment

g http://go.ad2up.com/afu.php?id=822188
 
Tamil lol © 2016-17. All Rights Reserved. Share on Albert Company. Powered by Albert
Top