ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ செல்போன் சேவை மும்பையில் தொடக்கம்
டிஜிட்டல் உலகின் பெரும் புரட்சியாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆர்.ஜியோ இணைய சேவையை அந்நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி இன்று மும்பையில் அறிமுகப்படுத்தினார்.
சாமானியர்களுக்கு கைபேசிகள் எட்டாத கனியாக இருந்த காலத்தில், 500 ரூபாய்க்கு கைபேசியை அறிமுகம் செய்து பெரும் புரட்சி செய்த ரிலையன்ஸ் நிறுவனம், தற்போது மீண்டும் ஒரு புரட்சியை செய்துள்ளது.
மும்பையில் நடைபெற்ற விழாவில் ஆர்.ஜியோ என்ற இணைய சேவையை ரிலையன்ஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பேசிய அவர், இந்த சேவையை நாட்டில் உள்ள 120 கோடி மக்களுக்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.
உலகிலே மிகக்குறைந்த விலையில் இணைய சேவை என்ற பெயரை பெற்ற ஆர்.ஜியோ சேவை, அனைத்து இந்தியர்களிடம் சென்றடைய வேண்டும் என்பதே தன்னுடைய நோக்கம் என்றும் அவர் கூறினார்.
சக செல்போன் நிறுவனங்களால் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 1 ஜிபி டேட்டா சேவையை, 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்த முகேஷ், பேசும் வசதியும், இரவு நேர இணைய சேவையும் இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
ரிலையன்ஸ் நிறுவனம் சார்பாக மிக குறைந்த விலையில் 3,000 ரூபாய்க்கு 4ஜி கைபேசியும் விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிவித்த அவர், இந்த சேவைகள் அனைத்தும் செப்டம்பர் 5லிருந்து செயல்பாட்டிற்கு வரவுள்ளதாகவும் கூறினார்.
ஆர்.ஜியோவின் அறிமுகத்தை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்ட் கட்டணத்தில் 80 சதவீதம் குறைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
0 comments Blogger 0 Facebook
Post a Comment